Cloud Rewards App is Real or Fake Genuine Review in Tamil இந்த அப்ளிகேஷனை பற்றி அனைவரும் கூகுள் மற்றும் இணையதளங்களில் அதிகமாக தேடப்பட்ட வருகின்றார்கள் இந்த அப்ளிகேஷன் உண்மையில் வருமானம் தரக்கூடிய அப்ளிகேஷன் தானா இல்லை பொய்யாக இருக்கக்கூடிய ஒரு அப்ளிகேஷன் னா என்ற ஒரு கேள்வி அனைவரது மனதிலும் இருக்கின்றது.
Cloud Rewards App is Real or Fake Genuine Review
நமது நாட்டில் அனைத்து மக்களும் வறுமையை எதிர்கொண்டு வருகிறார்கள் இதை ஒரு காரணமாக எடுத்துக்கொண்டு பண ஆசைகளைக் காட்டி நம் நாட்டின் அனைத்து மக்களையும் ஏமாற்றி கொண்டுவருகிறார்கள் என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.
முதலில் அனைவரும் ஒன்று கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டும் இந்த அப்ளிகேஷன் யார் தயாரித்தார்கள் என்று ஒரு அடையாளம் கொடுக்கப்படவில்லை.
இந்த அப்ளிகேஷனை தயாரித்த நபர்களை நாம் தொடர்புகொள்ளவும் முடியவில்லை முக்கியமாக நீங்கள் பணம் கொடுத்து அப்கிரேட் ஆனீர்கள் என்றால் அந்தப் பணம் திருப்பி வராது என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.
இந்த அப்ளிகேஷனில் நீங்கள் வேலை செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதை இன்று முதல் நிறுத்திக் கொள்ளுங்கள் அந்த அப்ளிகேஷனை உடனே இப்பொழுதே டெலிட் செய்து விடுங்கள்.
ஆகையால் இந்த அப்ளிகேஷன் முழுக்க முழுக்க பொய்யான தகவல் கொடுக்கும் application என்று
சொல்லலாம்.
அனைவரும் ஆரம்பகட்டத்தில் இலவசமாக கேப்ட்சா டைப் செய்து பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும் என்ற ஒரு கொள்கையை வெளியிடுகிறார்கள் அதுவும் 300 ரூபாய்க்கும் மேல் சம்பாதித்தால் மட்டுமே வங்கிக் கணக்குக்கு இந்த சம்பாதித்த பணத்தை மாற்ற முடியும் என்ற ஒரு நிபந்தனையை கொடுத்துள்ளார்கள்.
பணத்தை எவ்வாறு வங்கிகளுக்கு மாற்ற முடியும்.
பின்னர் நாம் நமது சம்பாதித்த பணத்தை வங்கி கணக்கு பரிவர்த்தனைக்கு மாற்ற முயலும் பொழுது community power என்ற ஒரு பொருளை நாம் வாங்க வேண்டும் அல்லது 20 நமக்கு தெரிந்த அல்லது தெரியாத நபர்களை இந்த அப்ளிகேஷன் மூலமாக அவர்களையும் இதில் நாம் இணைத்து விட வேண்டும் அல்லது நமது பாக்கெட் மணி 500 ரூபாய் பணம் கொடுத்து கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் ஏதாவது ஒன்று வாங்க வேண்டும் இந்த மூன்றில் ஏதாவது ஒரு டாஸ்க் ஐ நாம் முடித்தால் மட்டுமே நாம் சம்பாதித்த இந்த ஆரம்ப பணம் 300 ரூபாயை நாம் நமது வங்கிக்கு மாற்றும் முடியும் என்ற நிபந்தனைகளை அவர்கள் கொடுத்துள்ளார்கள்.
யாராக இருந்தாலும் 300 ரூபாய் பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்ற 500 ரூபாய் செலவு செய்யமாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஆனால் இவர்கள் கொஞ்சம் சிறிது பணங்களை நமக்கு கொடுப்பது போல் கொடுத்து ஆசைகளை தூண்டி நம்மிடமிருந்து 500 முதல் 9 ஆயிரத்து 500 ரூபாய் வரை டைமன் நம்பராக மாற கருதி நமது பணத்தை வாங்க பார்ப்பதுதான் இந்த cloud rewards application Idea .
முதலில் நீங்கள் இலவசமாக இந்த cloud rewards application இல் இணைந்து இலவசமாக கேப்ட்சா டைப் செய்து சம்பாதித்து கொண்டு இருப்பீர்கள் 300 ரூபாய் இருந்தால் மட்டுமே உங்களால் அந்த பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்ற முடியும் அதுமட்டுமல்லாமல் நீங்கள் சம்பாதித்த பணத்தை rs.300 அடைந்த உடனே வங்கி கணக்கிற்கு நீங்கள் மாற்ற முயன்றால் உங்களுக்கு ஏற்கனவே சொன்னது போல் பல டாஸ்குகள் உங்களுக்கு கொடுப்பார்கள்.
அதில் நீங்கள் ஏதாவது ஒரு டாஸ்க் ஐ இலவசமாக நபர்களை சேர்க்கும் விகிதத்தில் அல்லது
500 ரூபாய் கொடுத்து கம்ப்யூட்டர் உதிரி பாகங்களை வாங்க வேண்டும் அல்லது community power purchase பண்ண வேண்டும் என்பது தான் அவர்கள் கொடுத்த ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்.
Cloud Reward App Payment Proof
அனைவரது மனதிலும் ஒன்று தோன்றலாம் இந்த மூன்று டாஸ்க் ஏதாவது ஒரு டாஸ்க் முடித்தால் எங்களது பணம் எங்களுக்கு கிடைத்து விடுமா என்று ஒரு கேள்வி அனைவரது மனதிலும் இருக்கலாம்.
உங்களுடைய பணம் உங்களுக்கு வந்து சேரும் இவர்கள் சொல்லி இருக்கும் டாஸ்க்கில் ஒன்றை நீங்கள் சரியாக அவர்கள் கொடுத்திருக்கும் குறுகிய கால கட்டங்களில் சரியாக நீங்கள் செய்துகொண்டால் உங்கள் பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு வந்து சேரும்.
ஆனால்
நீங்கள் இரண்டாவது பட்சமாக சம்பாதிக்கும் பணத்தை உங்கள் வங்கி கணக்கிற்கு நீங்கள் மாற்ற முயலும் பொழுது உங்களை. Gold members, platinum members, silver members, diamond members. இது போல் மாற வேண்டும் என்று பரிந்துரை செய்வார்கள்.ஒவ்வொரு தடவையும் உங்களது பணத்தை உங்கள் வங்கி கணக்கிற்கு நீங்கள் மாற்ற முயலும் பொழுது ஏதாவது ஒரு பிரச்சனைகள் உங்களை சந்திக்க நேரிடும் என்பதை அனைவரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏராளமான நபர்கள் இந்த அப்ளிகேஷனில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பணம் வந்து சம்பாதித்து கொண்டேன் என்று யூ டியூப் மற்றும் இணையதளங்களில் அவர்களது கருத்துக்களை வெளியிட்டு இருப்பார்கள் அதைப் பார்த்து நீங்கள் நம்பி ஏமாற வேண்டாம்.
ஏனெனில் அவர்கள் நிறைய நாட்கள் காத்திருந்து அதிகப்பணம் வருவதற்காக திருட்டுத்தனம் வேலைகளை செய்தோ அல்லது ஸ்பேம் என்ற அடையாளத்தைக் கொண்டு இதுபோல் அனைவரது பார்வைகளிலும் சம்பாதித்த பணத்தை காட்டி ஏமாற்ற முயலும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு சில நபர்கள் உண்மையாகவே அதிக பணம் சம்பாதித்து வங்கி கணக்கில் பரிமாற்றம் செய்து கொண்டு வந்துள்ளார்கள் அவர்கள் சாதாரணமாக அதிக பணங்களை சம்பாதித்து வங்கி கணக்கிற்கு மாற்றி இருக்கமாட்டார்கள் இப்பொழுது நீங்கள் பார்த்த அனைத்து டாஸ்க் விகிதத்தில் அதை அனைத்தும் கடந்து வந்து சம்பாதித்து கொண்டு வந்து இருப்பார்கள் என்றும் நாம் சொல்லலாம்.
இந்த அப்ளிகேஷன்களை நம்பி யாரும் எந்த ஒரு பணத்தையும் கொடுத்து ஏமாற வேண்டாம் என்பதே எங்கள் சார்பில் நாங்கள் கூறுவது.
உங்களுடைய பணத்தை நீங்கள் தான் நல்லபடியாக பொறுப்பாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும் இதுபோல் நிறைய ஏராளமான அப்ளிகேஷன்கள் பொய்யாக தயாரிக்கப்பட்டு மக்கள் பணத்தை மக்களுக்கே ஆசைகாட்டி
மக்கள் பணத்தை வாங்குவதற்கு முயல்கிறார்கள் அதற்கு நாம் ஒத்துழைப்பு தரக்கூடாது.
இந்த அப்ளிகேஷனை பற்றி நமது யூடியூப் சேனலில் தெளிவான வீடியோ அமைக்கப்பட்டுள்ளது அந்த வீடியோவை நீங்கள் பார்க்கவேண்டும் என்றால் கீழே தெரியும் வாட்ச் வீடியோ என்ற பட்டனை அழுத்தவும்.
Note: இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்களது நண்பர்களுக்கு இந்த பதிவை பகிரவும்.
Follow on: facebook twitter instagram SK TECH PREMIUM